துரோகம் நம்மினத்தின் சாபம் என்பது பொய்யல்ல…!
பாம்பு தன்னுடைய தோலை எத்தனை முறை உரித்தாலும் அது
எப்போதுமே பாம்பு தான்….!
அதுபோல தான் மனிதர்களும்…!
இதை ஏன் இப்போ சொல்லுரேனு பாக்குரீங்களா….
முழசா படிச்சு பாருங்க ஏன் சொன்னேனு புரியும்…
ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான பெண்ணொருத்தி மகளாக இருந்தாள்!
அப்பெண் வளர்ந்தவுடன் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்த அவரது தந்தை ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அப்போட்டியில் வெற்றி பெறும் இளைஞனுக்குதான் தன் மகளை மணமுடித்து வைப்பேன் என்று ஊரிலிருப்போருக்கு மேளம்கொட்டி செய்தியை அறிவிக்கிறான்…!
போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான மற்றும் புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் சபையில் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சருவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்… நிக்க…!
அதனைப்பார்த்த அவளின் தந்தை அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.
அந்த இளைஞர்களும் திருதிருவென முழிக்க…! உடனே அவளின் தந்தை….
“இதோ உங்கள் கண்முன்னே இருக்கும் இந்த பெரிய நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிரே இருக்கும் அந்த முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்குதான் என் மகளை நான் திருமணம் செய்து தருவேன் என்று கூற…!”
அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது மீண்டும் ஒரு சலுகைகளை அறிவித்தார் அவரின் தந்தை…
“அதாவது இப்போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு 15 மில்லியன் டாலர் பணமும், அதனுடன் தனி பங்களாவும் கூட தருவேன்.. அது முழுக்க முழுக்க என் மகளுக்காகவே…அப்பொழுதுதானே, என் ஆசை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்…!”
“சரி… உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்…! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் எதிரே இருக்கும் மறு கரையில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்…!
சொல்லி முடித்தவுடன்… மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் ஆர்வமாக இறங்க முற்பட்ட பொழுது… அந்தப் பணக்காரனின் ஹெலிகாப்டர் (Helicopter), அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,
டஜன் கணக்கில் முதலைகளை (Crocodiles), அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது..!
அவ்வளவுதான்…! உடனே அத்தனை பேரும், தன்னது உயிர்மீது கொண்டுள்ள மரண பயத்தில் உடனே பின்வாங்கி கொடுத்த சலுகைகளை ஏற்றுகொள்ளாமல் ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்…!
“இதென்ன பைத்தியக்காரத் தனமாக (Madness) இருக்கிறது…? இத்தனை முதலைகளுடன் யாரால் இதை கடக்க முடியும்…? பார்க்கலாம்…! எவன் இதில் ஜெயிக்கிறான்னு…?” “நிச்சயமா எவனாலும், முடியாது!” என்று சத்தமாய் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது…!
திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் கேட்டு…!
அங்கிருந்த அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து.. உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, வச்சகண்ணு மாறாமல் அதாவது கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்…!
அந்த இளைஞன்,.. மிகவும் சுலபமாக, அத்தனை முதலைகள் நிறைந்த அந்த குளத்தின் முதலைகளிடமிருந்து விலகி விலகி, வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி,
வெடவெடவென நின்றான்…!
இதனை பார்த்த அந்த பணக்காரனால், அவனுடைய கண்களை நம்பமுடியவில்லை…!
“பிரமாதம்.! நான் தர்றதா சொன்ன விஷயங்களுக்கும் மேல,.. உனக்கு இன்னும் என்னவெல்லாம் வேணுமோ அத்தனையும் கேளு…!
நான் தர்றேன்…! எதுவாக இருந்தாலும் சரி தயங்காமல் கேளுனு அந்த பணக்காரன் சொல்ல…!”
அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை…!
அவனது வாயோ உயிர் பயத்தில் தந்தியடித்தது, மேலும் பயத்தில் அவனது கண்கள் இரண்டும் அரண்டு போய் இருந்தது…! பின், அவனோ ஒருவித வெறியுடன்…
“அதெல்லாம் இருக்கட்டும் சார்…
என்னை, இந்த முதலைகள் இருக்கும் குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்…!!!
🐊 நீதி-1 :
முதலைகள் இருக்கும் அந்த குளத்தில் உன்னை தள்ளிவிடும் வரை… உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது…! (அந்த குளத்தில் போடப்பட்ட ரப்பர் முதலைகள் போன்றே, உனது பிரச்சினைகளும் போலிதான்,.. என்பது புரியவரும்…!!!)
🐊 நீதி-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்…
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவான எதிர்காலத்தை அடைய உதவியவர்களே..! (நீங்கள் அவனுக்கு நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)
🐊 நீதி-3 :
சிலநேரங்களில், நாம் மிகவும் மோசமான கரடுமுரடான பாதைகள் நிறைந்த தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நமக்குள்ளிருக்கும் நிழலானது மறைந்து நிஜத் திறமை வெளியே கொண்டு வருகிறது…!
🐊 நீதி-4 :
சிலருக்கு,.. இம்மாதிரியான, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக (Forcibly) தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை (High goal) அடைய முடிகிறது…! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்…! ஆகவே இந்த கதை மூலம் சொல்லவருவது என்னவென்றால் எப்போதும் உங்களுக்கு சோறு போட்ட பெற்றோரை கடைசிவரை நம்புங்கள்…!)
நீங்கள் பிறந்ததிலிருந்து இருபத்தி மூன்று வருடம் வரை உங்களை பாதுகாப்பாக வளர்த்திவரும் உங்களின் பெற்றோர்களுக்கு என்றும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்…
உதாரணத்திற்கு….! இவ்வளவு நாள் உங்களை பார்த்து பார்த்து வளர்த்த பெற்றேருக்கு உங்களின் எதிர்காலத்தின் (கல்யாணம்)மீதும் அக்கரை கட்டாயமாக இருக்கும் ஆகவே உங்களின் எதிர்காலத்தை நீங்கலாகவே தேடிக்கொள்கிரேனென்று பாலங்குளத்தில் விழுந்து நாசமா போய்ராதீங்க….நிரையபேரு இப்போ அழுதுகிட்டு இருக்காங்க… ஆகவே நீங்க உசாராய் இருங்கள்….
நீங்கள் பெற்றோர்களை மதிக்காமல் செய்து கொள்ளும் திருமணத்தின் மூலம் நிறைய பேரை நீங்கள் இழக்கிறீர்கள்…உதாரணத்திற்கு மானம் போய்விட்டதே என்று ஒரு பக்கத்தில் குடித்து குடித்து இறக்கும் தந்தைகளும் உண்டு,மேலும் வெளியே தலைகாட்ட முடியாமல் தூக்குபோட்டு தொங்கிய அம்மாக்களும் உண்டு என்னைக்குமே நீங்க உங்க பெத்தவங்க சந்தோசத்துக்காக கல்யானம் பன்னிவைக்கும் வரை வாழுங்கள் உங்களோட சந்தோஷத்தை தேடி நீங்க போனீங்கன்னா அவங்க இத்தனை வருஷம் உங்கள வளத்துனதுக்கு அதற்கு அர்த்தமே இல்லை…..
குறிப்பு….
இவை அத்தனையும் பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தால் தப்பில்லை…. ஆனால் அவர்களின் விருப்பம் இன்றி எவையேனும் நடந்தால் மேல் சொன்ன விஷயங்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் தவறு செய்யத் தோன்றாது அதையும் மீறி தோன்றினாள்…….
இவை அனைத்தும் என்னுடைய வாழ்வில் நடந்த பகுதியை மட்டும் தான் உங்களுக்கு கதையாக எடுத்துக்கூறியிருக்கின் இது நல்லது என்று நினைத்தான் பலருக்கும் பயன்பட சேர் செய்யுங்கள் தவறென்று நினைத்தால் கீழே இருக்கும் கமெண்டில் உங்களின் விருப்பம்போல் திட்டிதீர்த்திடுங்கள்…
அடுத்த பதிவில் உங்களுடைய தோழன் மற்றும் சக தோழிகள் உங்களுக்கு எவ்வாறு எல்லாம் துரோகம் செய்வார்கள் என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் தோழன்….
😃😃😃