அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு

Photo of author
verified-symbolEyenan

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு

Andaman island's jail.

 

1942 மார்ச் மாதம் இரண்டாம் உலகப்போர் சமயம். அன்று ஜப்பானிய போர் விமானங்கள் அந்தமான்தீவின் வானில் வட்டமிட்டு சுற்றின, மேலும் போர்க் கப்பல்கள் அத்தீவினை சுற்றி வளைத்தன. அடுத்த சில தினங்களில் ஜப்பானிய படைகள் அனைத்தும் அன்றைய பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தமான் தீவினை கைப்பற்றியது.
 
 
அதன் பின்னர் அந்தமான் தீவினை சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திடம் (INA-Indian National Army) ஒப்படைக்கப்பட்டது. ஜப்பான் அரசுடன் நட்பு கொண்டிருந்த சுபாஷ் சந்திர போஸ் 1944-ல் அந்தமானுக்கு வந்து மூவர்ண கொடியை ஏற்றிவிட்டு பேசும் போது “இந்தியாவுடைய சுதந்திரத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக அந்தமான் சிறையை கைப்பற்றப் பட்டிருக்கிறது. இது இன்று முதல் ஒரு புண்ணிய பூமியாகிவிட்டது” என்று கூறினார்.
 
அந்தமான் சிறையை இந்தியாவின் பாஸ்டில் (Bastille) என சுபாஷ் சந்திர போஸ் வர்ணித்தார். மேலும் அப்போரின் போது புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் ஆட்சியில் பாரிசிலுள்ள பாஸ்டில் சிறைச்சாலை (Bastille) முதலில் தகர்க்கப்பட்டது.
 
 
ஆனால் எண்ணற்ற விடுதலை வீரர்களின் ரத்த சுவடுகள் பதிந்த இந்த அந்தமான் சிறை ஏதோ ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. செல்லுலார் சிறை அல்லது காலா பாணி என்றழைக்கப்படும் இந்த கொடூரமான ஜெயிலானது உருவாக 1887 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகம் (Sepoy Mutiny) எனப்படும் முதல் இந்திய சுதந்திர போரின் விளைவுகளே 1887-ல் இந்த சிறையை கட்ட அடித்தளமிட்டது. 
 
அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் புரட்சியை உண்டாக்கியவர்கள், மேலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் (போர்) செய்த பல அரசியல் தலைவர்கள் என அனைவரும் பல்லாயிரம் மைல் கடந்திருக்கும் இத்தனிமையான இருள் சிறைக்கு கடத்தப்பட்டனர். இதன் வழியாக மக்களிடம் சிறை என்னும் அச்சத்தையும், மேலும் புரட்சியாளர்களை கட்டுபாட்டிலும் வைக்கலாம் என ஆங்கிலேயா ( British government) அரசு எண்ணியது.
 
இருள் பக்கங்களை மட்டுமே கொண்ட இந்த சிறையில் 
 
1…சவார்கர் சகோதரர்கள், 
2…பரிந்திர குமார் கோஷ், 
3…பதுகேஷ்வர் தத் 
 
 
போன்ற முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். மேலும் அச்சிறையில் உள்ள தூக்கு மேடையில் எத்தணையோ தியாகளின் உயிர்கள் மற்றும் எந்த தவறும் செய்யாத ஏழை எளிய மக்களின் உயிர்கள் பலவும் பலியாகியுள்ளன. இது மட்டுமல்லாமல் ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து போராடிய தேசபற்று உள்ளவர்களை அச்சிறையில் மிகவும் கொடூரமான முறையில் அடித்தே கொன்றனர். 

Penal Settlements

Wikipedia Ross Island Penal Colony - Wikipedia
இதுபோன்ற குற்ற குடியிருப்புகள் (Jail)  1787 ஆம் ஆண்டு காலத்திலேயே இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் தீவுகளில் ஆங்கிலேயர்களால் (British government) கொடூரமான குற்றவளிகளுக்காக மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்போருக்காக உருவாக்கப்பட்டது. மேலும் இவ்வகையான குடியிருப்பு 1789-ம் ஆண்டில் அந்தமான் தீவின் கார்ன்வாலிஸ் துறைமுகப் பகுதியில் கூட கட்டமைக்கப்பட்டது, அதன் பின்னர் அங்கிருந்த கைதிகள் நோய்வய்பட்டத்தல் தண்டனைக் குடியிருப்புகள் அனைத்தும் அத்தோடு கைவிடப்பட்டது.
 
 
இருப்பினும் சிப்பாய் கலகமானது வங்க பிரிவினையின் போது கிளர்த்தெழுந்த புரட்சியாளர்கள் (Revolutionaries) மற்றும் தீவிரவாத பற்றாளர்கள் என அனைவரும் ஆங்கிலேயர்களின் மனதில் அச்சத்தை தோற்றுவித்தனர். இவ்வாறு அச்சத்தை தோற்றுவித்தவர்களை பொது சமூகத்திலிருந்து விலக்கி நாடு கடத்துதலே (Deportation of prisoners) ஒரே தீர்வு என பிரிட்டிஷ் அரசுக்கு சரி எனப்பட்டது.
 
1858 மார்ச் மாதம் கொடுந்தண்டனை அளிக்கப்பட்ட
 
1…இருநூறு கைதிகள், 
2…கடற்படைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் 
3…கண்காணிப்பாளர் டேவிட் பேர்ரி (David Barry)
 
ஆகியோர் ஆக்ரா சிறையின் வார்டனாக (warden) இருந்த டாக்டர் ஜே.பி.வாக்கர் (James Pattison Walker) தலைமையில் தெற்கு அந்தமானின் சாத்தம் தீவுக்கு அனுப்பபட்டனர்.
 
 
பிறகு கராச்சியிலிருந்து மற்றொரு குழு அந்தமானுக்கு அனுப்பபட்டது. இது மட்டுமல்லாமல் 1874 க்குள் 9000 க்கும் மேற்பட்டவர்களை அந்தமானின் தண்டனை குடியிருப்புகளுக்கு தீவாந்திர கைதிகளாக கொண்டுந்தனர். அந்தமான் ஜெயிலின் அடிமை வாழ்கையும் மற்றும் அங்கிருந்த வேலை பளுவும் (Heavy work) தாங்க முடியாமல் பல குற்றவாளிகள் அவ்வப்போது தப்பிக்க முயன்றனர். 

Tribe War

Loopholes In The 2006 Draft Tribal Policy of India
பாரக்பூரின் பதினான்காவது சுதேசி காலாட் படையைச் சேர்ந்த தத்தநாத் திவாரி என்பவர் தனது 130 சிப்பாய்களுடன் தப்பிச் சென்று விட்டார். மேலும் பெருங்கடலை கடக்க இயலாத காரணத்தால் அங்கிருந்த காட்டில் நுழைந்து ஓடினார்கள். ஆனால் அவர்களால் முழுவதுமாக தப்பிக்க முடியவில்லை, ஏனென்றால் அந்தமானின் கொடூரமான ஆதிவாசிகளிடம் சிக்கி அவர்கள் எல்லோரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
 
ஆனால் ஆதிவாசிகள் அதிசயமாக திவாரியை மட்டும் கொல்லாமல் அவர்களுடன் ஒருவராய் சேர்த்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அவர்களினத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவரை அவருக்கு திருமணம் கூட செய்து வைத்திருந்தனர்.
 
 
ஆதிவாசிகள் ஏற்கனவே அந்த தீவிற்கு வருபவர்களை விரட்டி அடிப்பதும் மற்றும் கப்பல்களை தாக்குவது என பெரும் சவாலாக பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தனர். ஒருநாள் ஈட்டி உள்ளிட்ட பலவேறுவிதமான கூர் ஆயுதங்களோடு தாக்குதல் தொடங்க தயாராவதை கண்ட திவாரி ஆதிவாசிகளிடமிருந்து தப்பித்து மீண்டும் அந்தமான் சிறையை வந்தடைந்து நடந்ததை சொன்னார். Battle of Aberdeen என்று பெயரிடப்பட்ட அந்த போரில் ஏராளமான பழங்குடியினர்கள் கொடூரமான முறையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் காட்டில் பதுங்கினர். இப்போரானது பழங்குடியினரை கட்டுபடுத்த ஒரு துவக்கமாக இருந்தது. 
 
ஆனால் அங்கிருந்த கைதிகளில் பலர் குற்றவாளிகள் என்பதால் அவர்கள் தப்பிக்க முயல்வதை நிறுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். ஆனால் 1000 கி.மீ க்கும் மேல் கடந்து கடல் மார்க்கமாக தாய் நாட்டை அடைவதென்பது அவ்வளவு சாதாரணமான செயலல்ல. அதையும் மீறி தப்பி ஓடியவர்கள் தப்பிக்க முடியாமல் அங்கிருந்த ஆங்கில காவல் படையிடம் சிக்கினர், மேலும் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். மேலும் கடலில் குதித்து தப்பிக்க முயன்றவர்கள் அக்கணமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
 
தண்டனை குடியிருப்புகள் (Penalty apartments) என்பது சிறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் அக்காலத்து சிறை என்றும் கூறலாம். இங்கு கைதிகள் அனைவரும் ஒன்றாக வைத்து பாதுகாவலர்களுக்கு மத்தியில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். குறிபிட்ட காலத்திற்கு பிறகு இவர்கள் சுதந்திர சீட்டு (Freedom ticket) வாங்கிக்கொண்டு அந்தமானில் தனியாக விவசாயம் செய்து வாழ கூட அனுமதி உண்டு. ஆனால் இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, என்று உணர்ந்தனர். மேலும் தண்டனை குடியிருப்புகள் (Penalty apartments) உண்மையில் பிடிக்கவில்லை என சொல்லலாம்.
 
இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று பிரிட்டிஷ் மேலிடம் விரும்பியது. மேலும் 1890 காலகட்டத்தில் தாமஸ் கேடல் என்பவரால் கிட்டதட்ட 600 போர் கைதிகளுக்கான தனித்தனி அறைகள் கொண்ட சிறைகள் அமைக்க திட்டம் ஒன்றை வரையறை செய்யப்பட்டது. இதற்காக அட்லாண்டா முனையில் ஓரிடம் தேர்வு செய்யப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இந்த கட்டுமான பணி 1906-ல் முடிவுற்று அக்கணமே அந்த சிறை பயன்பாட்டுக்கு வந்தது.
 
 
இந்த சிறையை கட்டுவதற்க்கு, ஏற்கனவே அங்கிருந்த கைதிகள் மற்றும் அருகிலிருக்கும் தீவுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கைதிகளையும் சேர்த்து எண்ணற்ற அடிமை கரங்களால் இந்த பிரமாண்டமான சிறையானது பிணைக் கைதிகளுக்காக உருவானது. ஒரு கண்காணிப்பு மைய கோபுரத்தோடு ஏழு நீல்வகை சிறைப்பிரிவுகள் கட்டப்பட்டது. அந்தமான் சிறையில் மொத்தம் 696 தனிச்சிறைகள் உள்ளன. மேலும் அங்கிருக்கும் ஒவ்வொரு சிறைசாலையிலும் 4 அடி அகல தாழ்வரத்தோடும் மற்றும் ஒவ்வொரு சிறைக்கூண்டும் ஒற்றை ஜன்னல் வசதிகளையும் கொண்டது.
 
சிறையின் ஏழு பிரிவுகளையும் இரவு, பகல் என பாராமல் கண்காணிக்க காவலர்கள் பணி அமர்த்தப்பட்டனர். சிறைச்சாலையில் மருத்துவமனை, ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கிலிடுவதற்கான வசதியை கொண்ட  தூக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்து மற்றும் முஸ்லீம் கைதிகளுக்கு உணவு சமைக்க தனித்தனி சமையலறை அமைக்கப்பட்டிருந்தன. 
 
இத்தகு வசதி நிறைந்த சிறையிலிருந்து தப்பிப்பதென்பது மிகவும் கடினமான ஒரு சவாலாகும்… இருந்தாலும் ………..
 

தொடரும்…

 
இத்துடன் முடிவு பெற்றது என்று மட்டும் நீங்கள் நினைத்து விடாதீர்கள்…
 
 
இதனைத் தாண்டி இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன. அவைகள் அனைத்தும் அடுத்தடுத்த பதிவில் உங்களுக்காக வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அந்தமான் தீவில் உள்ள சிறையை பற்றி நாம் பேச வேண்டுமெனில் இந்த ஒரு பதிவு முழுக்க முழுக்க பத்தவே பத்தாது. 
 
ஆகையால் இதன் தொடர்ச்சியை நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்தால் நமது வலைதளத்தை அடிக்கடி பார்வையிட்டுக் கொண்டே இருங்கள் அல்லது கீழே தெரியும் சப்ஸ்கிரைப் எனும் பட்டன் ஐ அழுத்தி சப்ஸ்கிரிப் செய்து கொள்ளுங்கள். 
 
உங்களுக்காக அடிக்கடி சுவாரஸ்யமான பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கும், மேலும் அந்தமான் தீவின் இச்சிறையைப் பற்றி அடுத்த பதிவில் இன்னும் தெளிவாக பார்ப்போம். நன்றி வணக்கம்…

1 thought on “அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு”

Leave a Comment