அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு…பகுதி-2

Photo of author
verified-symbolEyenan

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு…பகுதி-2

 
அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு...பகுதி-2
 
அந்தமான் தீவில் உள்ள இந்த சிறைச்சாலையை பற்றி முன்பே நாம் முதல் பதிவை வெளியிட்டு உள்ளோம். முதல் பதிவினை நீங்கள் படிக்காமல் நேரடியாக இரண்டாம் பதிவிற்கு வந்திருக்கிரீர்கள் என்றால் முதல் பகுதியைப் படித்துவிட்டு இந்த இரண்டாம் பகுதியை படித்தால் அதன் தொடர்ச்சி உங்களுக்கு கட்டாயம் புரியும். முதல் பதிவினை நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்தால் கீழே தெரியும் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.

 

Black terror

 

சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கைதிகளை மிககொடுமையாக சித்திரவதை படுத்த துவங்கினர் பிரிட்டிஷ் அதிகாரிகள். தேங்காய் நார்கள் (Coconut fiber) உரிக்க வேண்டும், அதை கொண்டு கயிறு (The rope must be twisted) திரிக்க வேண்டும். எண்ணெய் பிழிய செக்குகளை (oil-press) அமைத்து மாடுகளுக்கு பதிலாக கைதிகளைக் கொண்டு அந்த செக்கினை இழுக்க வைத்தனர். இவ்வாறு செக்கினை இழுக்கும்போது சோர்வடைந்து நிற்கும் கைதிகளை மாட்டை போல அடித்தனர்.

 

மாடுகளானது எவ்வளவுதான் முயன்றாலும் அதனால் நான்கு பவுண்ட் (4 pounds of oil) அளவில் தான் எண்ணெய் எடுக்க முடியும், ஆனால் அந்தமான் (Andaman) கைதிகள் ஒரு நாளைக்கு முப்பது பவுண்ட் எண்ணெயை எடுத்தே ஆக வேண்டும். முப்பது பவுண்ட் எண்ணெயை எடுக்கவில்லையென்றால் ரணக் கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். அதாவது உடலை கசக்கி பிழியும் இச்செயலை செய்ய முடிக்கவில்லை என்றால் அடி, உதை மரணமாக கிடைக்கும். கைதிகளுக்கு பிரம்பு/சவுக்கடி கொடுக்கவே முக்கோண வடிவ ஸ்டாண்ட் (Triangular shaped stand) உள்ளே இருந்தது. அதற்கு பயந்துக்கொண்டே அக்கைதிகளும் ஒருநாளைக்கு 30 பவுண்ட் எண்ணெயை எடுப்பார்கள். 

 

மிகக் குறைந்தளவில் கைதிகளுக்கு உணவினை அளித்து மேலும் மலையைத் தகர்த்து அதாவது 

 

1…மலையைக் கொடைந்து சாலைகள் அமைப்பது, 

2…சதுப்பு நிலங்களை நிரப்புவது,

3…காடுகளை அழித்து சமபடுத்துவது, 

4…கட்டிட வேலை 

 

போன்ற கடுமையான வேலை கொடுக்கப்பட்டது. கொடூரமாக சித்திரவதை (Terrible torture) படுத்துவதும் மற்றும் கீழ்தரமாக நடத்தி அவமனபடுத்துவதன் மூலம் புரட்சியாளர்களின் மன வலிமையை குலைப்பதே ப்ரிட்டிஷ் அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

 

மேலும் சிறையில் சாப்பாடும் மிக கேவலமாக இருந்தது. கைதிகள் குடிப்பதற்கு மழை நீர் மட்டும் தான் வழங்கப்பட்டது. படுக்க எந்த ஒரு தரைவிரிப்பும் கிடையாது. சிறைக் கைதிகள் ஒருவரோடு மற்றவர் பேச (One is not allowed to talk to the other) அனுமதியில்லை. சும்மாவே மற்ற சிறையை பார்க்க இயலாது, அதாவது பகலிலும் இருளாகவே இருக்கும் இதில் மாலை நேரம் ஆனால் எவ்வித வெளிச்சமும் இருக்காது. ஒற்றை ஜன்னல் கொண்ட அந்தமான் சிறையில் உணவு, சித்திரவதைகளைத் தாண்டி தனிமையும் (Loneliness) பெரும் தண்டனையாக அமைந்தது.

 

ஏற்கனவே தனிமைபடுத்திருந்த கைதிகளுக்கு இது மிகபெரிய சவாலாக அமைந்தது. சுதந்திர எழுச்சியானது எப்போதெல்லாம் இந்தியாவில் கொழுந்துவிட்டு எரிகின்றதோ அப்போதெல்லாம் அந்தமான் (cellular jail) சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. 1930 முதல் 1938 வரை விடுதலை போராட்டம் தீவிரமடையும் போதெல்லாம் 379 தண்டனை கைதிகள் செல்லுலார் சிறைக்கு கொண்டுவரபட்டனர்.

 

1…லாகூர் சதித்திட்டகாரர்கள், 

2…வாஹாபி புரட்சியாளர்கள், 

3…மலபார் கரையின் மோப்ளா கிளர்ச்சியாளர்கள், 

4…ஆந்திராவின் தம்பா போராட்டக்காரர்கள், 5…மணிப்பூர் சுதந்திரப் போராளிகள், 

6…பர்மாவின் கைதிகள் என பலர் 

இங்கு அடைக்கப்பட்டனர். சிறைக் கைதிகள் தங்கள் கௌரவத்தை (Honor) இழந்து ப்ரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தலைவணங்க (Refused to bow) அடியோடு மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அந்தமான் கைதிகளை பயங்கரமாக தாக்கினர்.

 

கதர் கட்சியை சார்ந்த சிலர் அங்கிருக்கும் ப்ரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அடிபணிய (We do not live as slaves to anyone) மறுத்து எதிர்ப்பை கட்டினர். அன்று இரவே அவர்கள் ஏழு பேரை முக்கோண வடிவ (Triangular shaped stand) கூண்டிலே வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொன்றனர். இதுமட்டுமல்ல அந்தமான் சிறையில் கைதியாக இருந்த இந்து பூஷன்ராய் (Hindu Bhushan Roy) என்ற இளைஞன் அவமதிப்பையும், சித்ரவதையையும் சகித்துக்கொள்ள முடியவில்லை என கடிதம் எழுதிவிட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான்.

 

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு...பகுதி-2

 

ஜெயிலர் டேவிட் பேர்ரி (David Barry) கைதிகளிடம் “நீ இங்கிருக்கும் வரை நான் தான் உனக்கு கடவுள்” என அடிக்கடி சொல்வதுண்டு. அதிகம் அறியப்படாத (David Barry) இவரின் தண்டனை முறைகள் மிகவும் கொடுமையானவை.

 

பிரபல அலிப்பூர் குண்டுவெடிப்பில் கைதான உல்லாஸ்கர் தத்தா (Ullaskar Dutta) ஒரு வெடிகுண்டு நிபுணர். வங்காளத்தை சேர்ந்த இவருக்கு ஆரம்பத்தில் தூக்கு தண்டனை (Execution) அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செல்லுலார் சிறைக்கு (cellular jail) மாற்ற முடிவு செய்யபட்டது. மிகக் கடுமையான வேலைகள் (Work) இவருக்கு கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் அவரால் அந்த தண்டனைகளை பொருத்துக்கொள்ள முடியாமல் எதிர்ப்பை காட்டி விட்டார்.

 

உடனே அவரை சிறைக் கூண்டின் உள்ளே அடைத்து அவரின் கைகளை உயர்த்தி ஒரு சங்கிலியால் இருக்கமாக பூட்டி நிற்க வைத்தனர். இவ்வாறு மூன்று நாட்கள் எந்த ஒரு அசைவும் உடலில் இல்லாமல் இருந்த அவரை கீழே இறக்கி விடப்பட்ட போது அவர் சுயநினைவு இழந்து நின்னார். அதன் பிறகு அவருக்கு பைத்தியம் பிடுத்து விட்டது. பின்னர் 1920- ல் ஒரு மன நோயாளியாக (As a mental patient) அவர் விடுதலை செய்யப்பட்டார்.

 

இத்தனைக்கும் இங்கு பணிபுரிந்த அதாவது சிறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பலர் நமது இந்திய நாடடைச் சேர்ந்த இந்தியர்கள் தாம், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரிந்த இவர்கள் 

1…பெட்டி ஆபிசர், 

2…டிண்டால், 

3…ஜமதார், 

4…முன்ஷி 

என பல்வேறு பதவிகள் வகித்தனர். எல்லோரும் ஒருவகையில் முன்னால் கைதிகளாக இருந்தவர்கள், அவர்களின் கடுமையான தண்டனைகளை தாங்கிக்கொல்ல முடியாமல் அவர்களிடமே பணிக்கு சேர்ந்துவிட்டனர். இதில் முன்ஷிக்கள் மட்டும் எழுத படிக்க அறிந்தவர்கள்.

 

அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு...பகுதி-2

 

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலா பாணிக்கு வந்த அரசியல் கைதிகளில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar). பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் ஐம்பது வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அளிக்கபட்டவர் வேறு யாருமில்லை. அந்தளவிற்கு அவரது எழுத்தாலும், மற்றும் இந்தியா ஹவுஸ் எனும் இயக்கத்தின் (The Rise of Independence) பெயராலும் சுதந்திர எழுச்சியை ஆங்கிலேயருக்கு எதிராக உண்டாக்கினர்.

 

ஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் (Soldier Rebellion) என ஒதுக்கியதை விவரித்து ஆராய்ந்து முதல் இந்திய சுதந்திர போராட்டம்-1857 (First Indian Independence Struggle 1857) என்ற புத்தகத்தை எழுதினார். அப்புத்தகம் எழுதி வெளியிடப்பட்டதும் பிரிட்டிஷ் அரசால் உடனே தடை செய்யப்பட்டது. அதன் பின் ஆத்திரமடைந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவர் சுதந்திர இயக்கங்களை உருவாக்கினார். இதனால் 1909 ல் அவரது சீடர்கள் இரு முக்கிய ஆங்கிலேயே அதிகாரிகளை லண்டனில் சுட்டுக்கொல்ல வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) கைது செய்யப்பட்டு கப்பல் வழியே இந்தியா கொண்டுவரப்பட்டார்.

 

கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் கடல் வழியே நீந்தி பின்னர் பிரான்ஸ் நாட்டின் துறைமுகத்தை அடைந்தார். துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி இவரை அந்தமான் சிறைக்கு அனுப்பினர்.

 

ஒரே சிறையில் இருந்தும் இவரது சகோதரர் இங்கிருக்கிறார் என தெரியாமல் சிறையில் இருந்துள்ளனர். இந்து மதத்தின் மீது தீவிர பற்றுமிக்கவரான சாவர்கர் சிறையில் இந்து முஸ்லிம் பகைமையை வைத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் நடுத்தும் நாடகத்தை எதிர்த்தார். அதனால் ஆத்திரமடைந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) சிறையில் உள்ள சுவர்களில் சுதந்திர எழுச்சி வாசகங்களை எழுதி வைத்தார். தொடர்ந்து கைதியின் அறைகளை மாற்றும் பழக்கம் அந்தமானில் (Cellular jail) இருந்ததால் அந்த சிறைக்கு வரும் மற்ற கைதிகள் அதன் தாக்கத்தை அனுபவித்தனர். 

 

அங்கிருந்த கைதிகள் அனைவரும் அந்த வாசகத்தை படித்த பிறகு மதம் பிடித்து போய் திரிந்தனர் அதாவது எதற்காக எனில்…….

 

இதனைத் தொடர்ந்து அடுத்த பதிவில் முழுவதையும் முடித்து விடுவோம் என்று நம்புகிறேன். அந்தமான் தீவை பற்றி பேசுவது என்றால் குறைந்தது ஓரிரு பதிவுகளில் மட்டுமே பேசி விட முடியாது. ஆகவே அடுத்த பதிவில் முழுமையாக முடித்து விடுவோம் அந்த பதிவினை நீங்கள் மறக்காமல் படிக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே தெரியும் சிவப்புக்கலர் சப்ஸ்கிரைப் என்னும் பட்டனை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு உடனடியாக நோட்டிபிகேஷன் வந்து சேரும்…

 

நன்றி வணக்கம்…

1 thought on “அந்தமான் சிறைச்சாலை – அறியாத இருளின் பிரமாண்ட வரலாறு…பகுதி-2”

Leave a Comment