அடியாத்தி…! திராட்சைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு இருக்கா…!!!
திராட்சைப் பழம்
திராட்சைப் பழத்தைச் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்குத் தேவையான வெப்பமும் சக்தியும் உடனே கிடைத்துவிடுகின்றன. இதில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் உடனடியாகச் சேர்ந்து விடுவதால் குறைந்த நேரத்தில் புதுத்தெம்பு கிட்டுகிறது.
திராட்சைப் பழம் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணமாக வைக்கிறது. இதயத்தைச் சரியாக இயங்கச் செய்கிறது. உடல் பலவீனத்தைப் போக்குகிறது. காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.
திராட்சைப்பழதைச் சாப்பிட்டாலும் சரி அல்லது திராட்சை ரசம் பருகினாலும் சரி, இருதய சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன. திராட்சையில் கால்ஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு, மக்னீஷியம் போன்றவை இருப்பதால் இரத்தசோகை, கீல் வாதம், மூட்டு வீக்கம் போன்றவை குணமாகின்றன.
திராட்சை ரசம் நாட்பட்ட அஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது. இரத்தத்தை நன்கு உற்பத்தி செய்கிறது. நாள்பட்ட மலச்சிக்கலை நீக்குகிறது. வயிறு, குடல் பகுதிகளை சுத்தப்படுத்துகிறது. தினமும் திராட்சை ரசம் பருகிவந்தால் ஆஸ்த்துமா, பல் ஈறுகளில் இரத்தக் கசிவு போன்றவை குணமாகும். இளமைத் துடிப்பையும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கிறது.
ஒற்றைத் தலைவலி வரும்போது சிறிதளவு திராட்சை ரசம் பருகினால் உடனே தலைவலி நீங்கும். சிறுநீரக நோய், மூலநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ரசம் பருகி வரலாம். நெஞ்சு வலிக்கும் போது திராட்சை ரசம் பருகினால் உடனே வலி குறையும். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம்1 தண்ணீரும், பொட்டாசியம் எனப்படும் தாது உப்பும் இருக்கின்றன.
புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் காலமாவதை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டால் போதும்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப் பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதைத் தங்கள் ஆய்வுமூலம் கண்டறிந்துள்ளனர்.
பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு1 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு1 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள்.
மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை தண்ணீரில் கலந்து அருந்தி வரச் சொன்னார்கள். ஆச்சரியம்! சில நாள்களுக்குப் பின் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்குக் குணமாகி இருந்தது.
அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டுக் குணப்படுத்தியுள்ளது எப்படி என்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதைப்பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமும் 50 முதல் 100 கிராம் வரை2 திராட்சைப் பழங்களை மென்று3 உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப் பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயை தடுக்கிறது-குணப்படுத்துகிறது என்று இந்த அமெரிக்க ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருப்பது திராட்சை பழம். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து கட்டுக்குள் இருக்கும். இரத்த அழுத்தத்தையும், திராட்சைப் பழம் கட்டுக்குள் கொண்டு வரும். காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடலில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட பொருட்களை வெளியேற்றும் சக்தியும் திராட்சைப் பழத்திற்கு உண்டு.
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் திராட்சைப் பழச்சாறை தினமும் பருகி வரவேண்டும். பருகிவந்தால் நாளடைவில் தலைவலி குணமாகிவிடும். திராட்சைப் பழம் சீசனில் அதிகமாகக் கிடைக்கும். அப்போது அதனை அதிகமான அளவில் வாங்கி சாறுபிழிந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை பல் முளைக்கும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வரவேண்டும். கொடுத்து வந்தால் பல் முளைக்கும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படும் நோய்கள் எதுவும் ஏற்படாது.
மலச்சிக்கல் ஏற்படும் குழந்தைகளுக்கும் ரத்தம் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் திராட்சை பழச்சாறு தினமும் கொடுத்து வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும். ரத்தமும் அதிகமாக உருவாகும். கிட்னி தொடர்பான நோய்கள் இப்போது அதிகரித்து வருகின்றன.
இந்த நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் திராட்சை பழத்திற்கு இருப்பதால் கிட்னி தொடர்பான நோய் இருப்பவர்கள் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
தற்போதைய உணவு பழக்க வழக்கம் பலரையும் ஜீரணக்கோளாறு கொண்டவர்களாக ஆக்கிவிட்டது. ஜீரணத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் தீர்க்கும் சக்தி திராட்சை பழத்திற்கு இருக்கிறது.
அதனால் ஜீரணக்கோளாறு கொண்டவர்கள் தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும். குழந்தைகளுக்கு திராட்சைப் பழத்தை அப்படியே கொடுக்க முடியாது. அவர்களுக்கு சுடுநீரில் உலர்ந்த திராட்சை பழத்தைப் போட்டு பிழிந்தெடுத்த நீரைக் கொடுக்க வேண்டும்.
இதயத்தைப் பலப்படுத்தும் சக்தி திராட்சை பழத்திற்கு அதிகம். திராட்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய வலியைக் கட்டுப்படுத்த முடியும். இதயத்துடிப்பை சீர்படுத்திவிடவும் முடியும், கறுப்பு, சிவப்பு, பச்சை நிறங்களில் திராட்சைப் பழம் உண்டு. இவைகளில் சிவப்பு திராட்சையிலே அதிகமான அளவு சத்து இருக்கிறது.
உடலுக்கு தேவையில்லாத வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி திராட்சை சாறுக்கு இருக்கிறது. திராட்சை சாறு தினமும் பருகி வந்தால்1 உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பச்சை அல்லது வெள்ளை நிறத் திராட்சை வேண்டாம். கறுப்பு அல்லது சிவப்பு திராட்சையில் குணமாக்கும் அமிலங்கள் அதிகம். திராட்சையில் பல வகைகள் உண்டு.
சில பச்சை நிறமாகவும், சில கருப்பு நிறமாகவும் உள்ளன. திராட்சை எத்தனை வகையாக இருப்பினும், அதை பச்சையாகவோ உலர்ந்த நிலையிலோ சாப்பிட்டாலும் அதற்கு நல்ல மருத்துவ இயல்பு அமைந்திருக்கிறது. பல வகையான குடல்1 கோளாறுகளுக்கும் பச்சைத் திராட்சை நல்ல வகையில் பயன்படுகிறது. இருதய நோய்களையும் பச்சைத் திராட்சை சீராக்கும் இயல்பு பெற்றி ருக்கிறது.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற1 உடல் நடுக்கத்தைச் சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு. பச்சைத் திராட்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப்புண், வாய்ப்புண் ஆறும். கறுப்பு திராட்சையில் பச்சைத் திராட்சையைவிட சிலவகை சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. உலர்ந்த திராட்சைப் பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மட்டுமே அதிகமாக உள்ளது.
உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதைவிட சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.
வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த1 திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். முதுமைப் பிராயத்தினர் உலர்ந்த திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் அது அவர்கள் ஆரோக்யத்தைக் காக்கும்.
Super information…😍😍😍
Nandri