மிக்கி மவுஸின் பிறந்தாள் எப்போவென்று உங்களுக்கு தெரியுமா…?

Photo of author
verified-symbolEyenan

மிக்கி மவுஸின் பிறந்தாள் எப்போவென்று உங்களுக்கு தெரியுமா…?

மிக்கி மவுஸின் பிறந்தாள் எப்போவென்று உங்களுக்கு தெரியுமா...?

 

மிக்கி மவுஸின் தோற்றம்

நாம் வாழும் இந்த உலகத்தில் மிகவும் அதாவது உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் எதுவென்று கேட்டால் அனைவருக்கும் முதலில் தோன்றுவது மிக்கி மவுஸ்தான். இதை, 1928-ல் உவ் வெர்க்ஸ் (Ub Iwerks) என்னும் வரைபடக் கலைஞருடன் இணைந்து வால்ட் டிஸ்னி உருவாக்கினார். அமெரிக்காவில் வால்ட் டிஸ்னி என்னும் பெயரில் மிகப் பெரிய நிறுவனம் தொடங்க அஸ்திவாரமாக இருந்தது இந்தக் கதாபாத்திரம்தான்.

மிக்கி மவுஸ் (Mickey Mouse) தொடரில் வந்த எல்லாப் கார்ட்டூன் படங்களும் பெரிய அளவில் வெற்றிபெற்ற படங்களாகும். இன்றும் இவ்வுலகில் குழந்தைகளுக்கான ரசிக்கத்தக்க படமாக மிக்கி மவுஸின் படங்கள் இருக்கின்றன. ஒருகாலத்தில் மிக்கி மவுஸ் (Mickey Mouse) இல்லாமல் வேறு மார்க்கம் இல்லை என்ற நிலை இருந்தது.

இந்த மிக்கி மவுஸ் படங்களின் ‘ப்ளேன் கிரேசி’தான் (Plane Crazy) முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் சார்லஸ் லிண்ட்பெர்க் என்னும் விஞ்ஞானி விமானத்துறையில் புதிய ஆராய்ச்சிகளும் சோதனையும் செய்து பார்த்துக்கொண்டிருந்த காலகட்டம். அந்தக் காலத்தில் அவரது சோதனை ஓட்டங்கள் பேசு பொருளாக இருந்தன. அப்போது இதை ஒட்டி ஒரு படம் தயாரிக்கலாம் என உவ் வெர்க்ஸும் வால்ட் டிஸ்னியும் முடிவெடுத்தார்கள். 

அப்படி உருவாக்கப்பட்டதுதான் ‘ப்ளேன் கிரேசி’.

மிக்கியை, சார்லஸ் லிண்டெர்க் போலச் சித்தரித்து அது புதிய விமானத்தை உருவாக்க முயலும். ஒருவழியாக சொந்தமாக விமானத்தை உருவாக்கிவிடும். ஆனால், பறக்கும்போது பழுதடைந்து சுக்கு நூறாகிவிடும். பிறகு மீண்டும் ஒரு விமானத்தை மிக்கி உருவாக்கும். அருகில் நின்று இரை தேடிக்கொண்டிருக்கும் வான்கோழியின் தோகையைப் பிடுங்கி விமானத்தின் பின்னால் செருகிக் கொள்ளும். 

அப்போது அந்த வழியாக வரும் ஒரு பெண் மிக்கியிடம் விமானத்தில் வரச் சொல்லி மிக்கி கேட்கும். இருவரும் பயணப்பட, பறப்பதற்கு முன்பே மிக்கி கிழே விழ, பெண் மிக்கி மட்டும் விமானத்தில் மாட்டி முழித்துக்கொண்டு இருக்கும். ஒரு மாடு விமானத்தைப் பின் தொடர அதன் மேல் குதித்து மிக்கி விமானத்தில் ஏறிக்கொள்ளும். விமானம் பறந்த பிறகு மிக்கி, பெண் மிக்கியிடம் குறும்பு செய்யும். இப்படிப் போகும் இந்தக் கதையில் விமானம் மீண்டும் விபத்துக்குள்ளாகும்.

ஆறு நிமிடம் ஓடும் இந்தப் படம் 15, மே, 1928-ல் சோதனைக் காட்சியாக வெளியிடப்பட்டது. இது ஒரு மவுனப் படமாகும். இந்தப் படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் அதைப் பெட்டியில் வைத்துவிட்டார்கள். பிறகு இந்தப் படம் ஒலிச் சேர்ப்பு செய்யப்பட்டு மீண்டும் 17, மார்ச், 1929-ல் வெளியிடப்பட்டு பெரிய வெற்றி கண்டது.

 

ப்ளேன் கிரேசி படத்தைக் காண: CLICK NOW

Leave a Comment