என்னாது வலிமை பார்ட் 2 வரப்போகுதா…? குழப்பத்தில் ரசிகர்கள்…!
தயாரிப்பாளர் போனிகபூர் ரீ டிவீட் செய்த டிவிட்டால் வலிமை படம் பார்ட் 2 வருமா என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் ரிலீசாகும் என புதிய போஸ்டர்கள் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வலிமை படம் தமிழ் மொழியியல் மட்டுமல்லாமல் மேலும் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளி வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதனை முன்னிட்டு ‘வலிமை’ படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழை வலிமை படம் பெற்றுள்ளது. மேலும் இந்த படமானது 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வலிமை படத்தை பார்த்த போனி கபூரின் நண்பரும், பாலிவுட்டின் சினிமா பிரமுகரும், மற்றும் முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் பற்றி ஃபேஸ்புக்கில் அதி மிரட்டலான விமர்சனம் செய்துள்ளார். அதில், “ஜீ ஸ்டுடியோவின் (Zee Studio) பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம், (அடேங்கப்பா…!) படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்….
ஃபாஸ்ட் And ஃபியூரியஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை.
ஏன் ஹாலிவுட் படம் மட்டும் தான் பயங்கர பிரமாண்டமா இருக்கனுமா…? நாங்களும் எடுப்போம்னு சொல்லி ஹாலிவுட் லெவலுக்கு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எச்.வினோத்.
மேலும் வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய (Screen Fire) வைக்க போகிறது. ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும். புஷ்பா படம் இந்த வருடத்தின் ஆரம்பம் என்றால், வலிமை படமானது இந்த வருடத்தின் க்ளைமாக்ஸாக தான் இருக்கும். பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் – இந்தி …!!!” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மற்றும் வினியோகஸ்தருமான சுனில் வத்வா டிவிட்டரில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், வலிமை படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி அடையும் என்றும், மேலும் இப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அனைத்தும் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் (Seat) நுனிக்கு கொண்டு வரும், இதுமட்டுமின்றி வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வரவேண்டும் என்று அவர் டிவீட் செய்துள்ளார். இதனை வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ரீ டிவீட் செய்துள்ளார்.
இதன் மூலம் வலிமை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா என ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்துள்ளனர். மறுபக்கம் ஹாலிவுட்…! ஹாலிவுட்னு சொல்லி விவேகம் மாறி படத்தை மொக்கையாக்கிடாதீங்கடானு சொல்லி ரசிகர்கள் ஒரே புலம்பல்…